• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கிய நடிகர்!

வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் நடிகர் அஜித்தின் நடனம் பரோட்டாவிற்கு மாவு பிசைவது போல இருப்பதாக மோசமாக விமர்சித்திருந்தார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது!

சினிமாவை தாண்டி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை (குறிப்பாக மணிரத்னம்) பெர்சனலாக கலாய்த்து பேசுவதை தனது பாணியாக வைத்துள்ளார். இவருக்கு எதிராக திரை துறையை சார்ந்த பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், வலிமை விமர்சனத்தை பார்த்து கடுப்பான வேம்புலி நடிகர் ஜான் கொக்கன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அன்புள்ள ப்ளூ சட்டை மாறன் அவர்களுக்கு நீங்கள் ஒரு பெரிய திரை விமர்சகர் நான் ஒரு சாதாரண நடிகன் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் எனக்கு உங்களிடம் நீங்கள் விமர்சனம் செய்வது குறித்து ஒரு கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது

குறைகளை சுட்டிக் காட்டுவது எந்த அளவு தேவையோ அதே அளவு பிறரை மரியாதையாக பேசுவதும் தேவை சினிமாவில் உழைப்பவர்கள் பலரும் தங்கள் ஈடுபாட்டை அர்ப்பணிப்பை கொடுத்து உழைப்பவர்கள் பெரிய பெரிய இயக்குனர்கள் நடிகர்கள் சூப்பர் ஸ்டார்கள் பணியாற்றுகிறார்கள் அவர்கள் தங்களை இந்த அடையாளங்களில் நிலைநிறுத்த எத்தனை போராடி இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும். ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு அந்த இடத்திற்கு வந்து இருப்பார் என்பது உங்களுக்கே தெரியும் .

முதலில் நடிகராக தன்னை மக்கள்முன் நிரூபித்த பிறகே அவர்கள் சூப்பர் ஸ்டார் ஆகிறார் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போது ஆவது நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள் என்பதே என் கோரிக்கை. நீங்களும் ஒரு படம் இயக்கி இருக்கிறீர்கள் அதன் வலி வேதனை என்னவென்று உங்களுக்கும் புரியும். யாரையும் தனிப்பட்ட முறையில் கேவலமாக பேசுவதை தவிர்த்து மரியாதையுடன் விமர்சியுங்கள்.

சினிமாவில் இருக்கும் ஒரு சிறிய நடிகனாக என் கோரிக்கை நான் அஜித் சாரின் ரசிகன் அவர் ஸ்டைலிலேயே இறுதியாக ஒன்று “நீங்க என்ன வேணா பண்ணுங்க.. உங்களுக்கு பிடிச்சத பண்ணுங்க.. ஆனா அடுத்தவன மிதிச்சி முன்னேறனும் நினைக்காதீங்க.. வாழு வாழ விடு” என மிக நீண்ட கடிதத்தை எழுதி ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.