புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா நார்த்தாமலை ஸ்ரீ புலிமேல் கருப்பர் ஆலய ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று திருவிளக்கு பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது.

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத சுமங்கலி விளக்கு பூஜை குழு சுப்பையாலட்சுமி அம்மாள் VS.ஷங்கர்பாக்கியலட்சுமி குடும்பத்தார்கள் சார்பில் நடைபெற்ற 101 – குத்து விளக்கு பூஜையில் சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது தங்களது இல்லத்தில் திருமண வரன் மாங்கல்ய பாக்கியம் குழந்தை வரன் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெற இப்பூஜையில் வேத மந்திரங்கள் நடைபெற்றது.
அதன் பிறகு ஸ்ரீ புலிமேல் கருப்பர் சுவாமிக்கு அபிஷேக செய்யப்பட்டு சிற்ப்பு தீபாராதனை காண்பிக்கபட்டது. அப்போது புதுக்கோட்டை கீரனூர் ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.