• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

84 வயது முதியவர் 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்

Byகாயத்ரி

Jan 5, 2022

பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தை சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 வயது முதியவர், 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். 12-வது முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முயன்றபோது பிடிப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-பிரம்மதேவ் மண்டல், தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதியில் இருந்து டிசம்பர் 30-ம் தேதி வரை 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். 12-வது முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தபோது பிடிப்பட்டார்.

8 முறை ஆதார் எண்ணையும், 3 முறை வாக்காளர் அடையாள எண்ணையும் கொடுத்து தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். அவரிடம் கேட்டபோது தடுப்பூசியால் அதிகம் பயனடைந்ததாக கூறுகிறார். இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது.இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.