புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன் பெருவிழா நேற்று புதுக்கோட்டை நகரமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நடைபெற்றது. அதில் முதல் கம்பன் கழகத்தின் விழாவாக ரங்கராஜ் பாண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கம்பன் கழக விழாவில் முதலில் கம்பன் கழகத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விழா துவக்கி வைத்தனர். அதன் பிறகு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரங்கராஜ் பாண்டே தனது தனித்துவ பேச்சினால் மக்களின் அவருடைய பேச்சைக் கேட்பதற்காக அரசியல்வாதிகளும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அவருடைய உரையை கேட்ட ரசித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கம்பன் கழகத்தின் உறுப்பினர்கள் புதுக்கோட்டை ராணி சாருலதா தொண்டைமான் மாமன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.