• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா..,

BySeenu

Jun 24, 2025

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இரத்த தான முகாமில், பலர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்.

SDPI கட்சி 17 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக எஸ்.டி.பி.ஐ. தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி சார்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயிர் காக்கும் உதிரம் வழங்கும் நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தாஜுல் இஸ்லாம் பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக நிகழ்ச்சி துவக்க விழா,தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா கலந்து கொண்டு இரத்த தான முகாமை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினர்களாக SDPI கட்சி கோவை மத்திய மாவட்ட தலைவர்,முஹம்மது இசாக், குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஹனஃபி ஜமாஅத் தலைவர் ஹாஜி முகம்மது இப்ராஹீம், சுண்ணாம்பு காளவாய் தீனுல் இஸ்லாம் ஷாபிய்யா சுன்னத் ஹனபி ஜமாத், தலைவர் அசரப் அலி,ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரத்த தான முகாமில் எஸ்.டி.பி.ஐ.கட்சி நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.

துவக்க நிகழ்ச்சியில், SDPI கட்சியின் பல்வேறு நிலை நிர்வாகிகள்,சாகுல் ஹமீது,இப்ராஹிம் பாதுஷா அபுதாஹிர்,காமிலா,உமர் ஷெஃரீப்.முகமது இக்பால், அபுதாஹிர், நூருல்லா, அன்சர் ஷரீஃப், லக்கி ரபீஃக் மன்சூர், அக்பர் அபதாஹிர், சாகுல் ஹமீது ,ஜெமிஷா ஜேசுராஜ் ரபீக் முஹம்மத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் தொகுதிக்கு உட்பட்ட வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.