• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கிஸான் திட்டத்தின் 11வது தவணை இந்த மாதம் வழங்கப்படும்…

Byகாயத்ரி

May 3, 2022

Pm-kisan திட்டத்தின் கீழ் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மூன்று தவணைகளில் தலா இரண்டாயிரம் ரூபாய் என ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் இதுவரை மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வழங்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் இன்னும் பணம் வரவில்லை. விவசாயிகளுக்கான pm-kisan கணக்கில் பணம் வருவதற்கான உறுதி தகவல் உள்ளது. இருந்தாலும் பணம் வரவில்லை. இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி மே 14 அல்லது 15 ஆகிய தேதிகளில் 11-வது தவணை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 15 ஆம் தேதி தான் பணம் வழங்கப்பட்டது. அதனைப் போலவே இந்த வருடமும் மே 15ஆம் தேதி பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பணம் கிடைக்க வேண்டுமென்றால் விவசாயிகள் தங்களது கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயம் முடித்திருக்க வேண்டும். Pm-kisan இணையத்தளத்தில் அதற்கான வசதியும் உள்ளது.