கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேலகிருஷ்ணன்புதூர், நரையன்விளை பூப்பதி கோவில் அருகில் ரூ. 12 இலட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணிகளுக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்.

இராஜாக்கமங்கலம் ஒன்றியம், மேலகிருஷ்ணன்புதூர், நரையன்விளை பூப்பதி கோவில் அருகே இரும்பிலான கொட்டகை அமைத்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் இக்கோரிக்கையினை ஏற்று இதற்காக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025 – 2026-ன் கீழ் ரூ. 12 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதனடிப்படையில் இப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா இப்பகுதியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் இதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.







; ?>)
; ?>)
; ?>)