கன்னியாகுமரியில் 1000_ம் ஆண்டுகள் பழமையான குகநாதீஸ்வரர் கோவில் மாங்கனி திருவிழாவில் தளவாய் சுந்தரம் பங்கேற்றார்.
கன்னியாகுமரியில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு,1000_ம் ஆண்டுகள் பழமையான குகநாதீஸ்வரர் கோவிலில், ‘புனிதவதி’ என்ற புகழ்பெற்ற காரைக்கால் அம்மையாருக்கு தனி சன்னதியும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி நாளில் காரைக்கால் அம்மையாருக்கு சிவன் மாங்கனி அளித்ததை நினைவு கூறும் வகையில், மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் படி
பவுர்ணமி தினத்தையொட்டி நேற்று முன் இரவு(ஜூலை_09) மாங்கனி திருவிழா நடந்தது. இதில் சிவன் பிச்சாண்டவர் கோலத்தில் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார்.
கோவில் வெளிப்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தபின், பக்தர்கள் குறிப்பாக பெண்கள் தட்டுகளில் மாம்பழத்தை ஏந்தி வந்து காணிக்கையாக செலுத்தினார்கள்.
இந்த மாம்பழங்களை பக்த்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் பங்கேற்றதுடன், அந்த நிகழ்வில் பங்கேற்ற பக்த்தர்கள் அனைவருக்கும் தளவாய் சுந்தரம் சார்பில், மாம்பழங்கள் வழங்கப்பட்டது.