• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குமரி அய்யா வைகுண்டசாமி தலைமை பதவியில் தை திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிவியில் ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11_நாட்கள் திருவிழா நடப்பது இந்த தலைமப்பதிவியின் தனித்த சிறப்பு.

இந்த ஆண்டுக்கான தை திருவிழா இன்று (ஜனவரி_19)ம் நாள் காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று அதிகாலை 4_மணிக்கு முந்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல் அடுத்து காலை 5_மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருவிழாவின் 11_வது நாளில் எதிர் வரும் ( ஜனவரி29)ம் தேதி நண்பகல் 12மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.

இவ்வாண்டு தை திருநாள் நடைபெறும் காலத்தில் எதிர் வரும் 22-ம்தேதி. தமிழக எதிர் கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சாமி தோப்பு தலைமை பதிவிக்கு வரவிருக்கும் தகவலை, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.