• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடநூல்களை திரும்பப் பெற வேண்டும்…

Byகாயத்ரி

Apr 6, 2022

வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடல்களை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

செவிலியர் கல்லூரிகளில் வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடநூல்களை திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், செவிலியர் படிப்பிற்கானTextbook of Sociology for Nurses என்ற நூலில் வரதட்சனை புனிதப்படுத்தும் வகையிலான பல கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது. டி.கே இந்திராணி என்பவர் எழுதிய இந்த நூல் நாட்டின் பல செவிலியர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டிருக்கிறது.

வரதட்சணை மூலம் கிடைக்கும் பொருட்கள் வீட்டை கட்டமைக்க உதவுகிறது. மகனுக்கும் கிடைக்கும் வரதட்சிணை கொண்டு மகளை திருமணம் செய்து கொடுக்க முடிகிறது. மேலும் வரதட்சணை தான் மகளிர் கல்வியை ஊக்குவிக்கிறது என்பது போன்ற அந்த நூலில் உள்ள கருத்துக்கள் பிற்போக்கானவை. அசிங்கமான பெண்களை கவர்ச்சிகரமாக வரதட்சனை மூலம் அழகான பையனுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என அந்த நூலில் குறிப்பிட்டு இருப்பது பெண்களை பண்டமாக பார்க்கும் இழிவான செயல் என இந்த கருத்திற்கு செவிலியர் கல்விக்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை.

மேலும் வரதட்சணை ஆதரவு பிரச்சாரம் அமைப்புகளில் கூட வைக்க தகுதியற்ற இந்த நூலை செவிலியர் படிப்பிற்கான பாடமாக வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் அந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடத் திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.