• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும்
ஐ.நா.வில் ருசிரா கம்போஜ் பேச்சு

பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம் என்று ஐ.நா.வில் நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசும்போது, உலக நாடுகள் தீவிர கவனத்தில் கொள்வதற்கு முன்பே தசாப்தங்களாக எல்லை கடந்த பயங்கரவாதத்தின் பயங்கரங்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இதில் பல அப்பாவி உயிர்களை இழந்து விட்டோம். பூஜ்ய சகிப்பு தன்மையுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். தொடர்ந்து போராடுவோம். எங்களது பிரதமர் குறிப்பிட்டது போன்று, பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம் என்று கூறியுள்ளார்.