• Thu. Mar 27th, 2025

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை? ராஜபாளையத்தில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு…!

ByN.Ravi

Feb 27, 2024

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜபாளையம் நகர் பகுதியில் முழுவதும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரை எங்கேயும் காணவில்லை! “கண்டா வரச் சொல்லுங்க” என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் தொகுதி மக்கள் சார்ந்த குறைகளை தீர்க்கவில்லை என்ற அதிருப்தியில் இவ்வாறு சிலர் போஸ்டர்கள் ஒட்டி இருக்கலாம் என கூறப்படும் நிலையில், போஸ்டர் ஒட்டியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.