காரைக்கால் மாவட்டத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பார்வதிஸ்வரன் கோயில் நிலங்களை போலி பட்டா மூலம் விற்பனை செய்ய முயன்ற துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒரு வருட காலம் கடந்த பிறகும் இந்த வழக்கிற்கு இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் குற்றவாளிகள் சுதந்திரமாக திரிவதாகவும், அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகளின் நிலை பற்றி காவல்துறை எந்தவித கவலையும் இன்றி இந்த வழக்கை ஆமை வேகத்தில் விசாரித்து வருவதாகவும் காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவர் ராஜ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று நடைபெற்ற மக்கள் மன்றத்தில் இதுகுறித்து டிஜிபி சத்தியசுந்தரத்திடம் இந்த வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதுபோல தக்களூர் சிவன் கோயில் நில மோசடி வழக்கையும் காவல்துறை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.










