• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது..!

ByKalamegam Viswanathan

Oct 9, 2023
மதுரையில் நடைபெற்ற வாகன தணிக்கையின் போது, ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் செயல்ப்பட்டு வரும் வானமாமலை நகர் ரேஷன் கடையில் நேற்று நண்பகலின் போது மர்ம நபர்களால் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்கள் வேகமாக பரவியதை அடுத்து அரிசி மூடைகளை கடத்தப்படுவதாக உணவு வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 
அதனைத்தொடர்ந்து ஜீவாநகர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஜெய்ஹிந்து புறத்தை சேர்ந்த கார்த்திகேயன்(வயது 28) என்பவர் இருசக்கர வாகனத்தில் அரிசி மூடைகளுடன் போலீசாரிடம் பிடிபட்டார்.  தொடர்ந்து அவரிடம் இருந்து சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 150 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும் சமூக அலுவலர் ஒருவர் தெரிவித்ததாவது.., 
பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய ரேஷன் அரிசி மற்றும் பருப்பு சக்கரை மற்றும் பாமாயில்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட நபர் கூலிக்கு வேலை செய்தவர் என்பதும் முக்கியமான புள்ளிகளை உடனடியாக கைது செய்து மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த ரேஷன் பணியாளர்களை கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பதும் இதுபோன்று எந்தப் பகுதியில் நடக்காத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது அனைத்து ரேஷன் கடைகளில் ஆய்வு  மேற்கொண்டு இருப்புகளை கண்காணிக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்