குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடல் முன் நடைபெற்றது.

அரசாணையின்படி அரசு பள்ளி மாணவர்களும், சுயநிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் விதத்தில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த அரசாணையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சேர்க்கப்பட்டாமல் இருப்பது கண்டு பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் சமூகமும் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பயிலும் மாணவர்களும் இந்த வாய்ப்புகிட்டும் என தி.மு.க.தேர்தல் அறிவிப்பில் சொல்லப்பட்டதை நிறை வேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன். நாகர்கோவில் தமிழ் நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் இருபால் ஆசிரியர்கள், அருட் பணியாளர்கள்,அருட் கன்னியர்கள் பட்டினி போராட்டத்தின் மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இந்த நிகழ்வில் முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் டைமண்ட், மாநிலத் தலைவர் கண்ணன்
அருட்பணி டோமினிக் எம். கடாட்சதாஸ், அருட்பணி ஜாண் பெனிட்டோ மற்றும் அருட் கன்னியர்களும் இந்த பட்டினி போராட்டத்தின் காலமாக. காலை 10_ மணி முதல் மாலை 4_ மணிவரை பங்கேற்றார்கள்.






