மதுரை அமேஸ் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக ஆசிரியர் தின விழா தலைவர் பரமசிவம் முன்னிலையில் மஹபூப்பாளையம் எம்.பி.சி. ஹாலில் நடைபெற்றது. செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் கலந்து கொண்டார்கள். சங்கத்தின் சார்பாக இவர்களின் கல்விச் சேவையை பாராட்டி கௌரவப்படுத்தப்பட்டது. பொருளாளர் சபரீஷ் பாபு நன்றி உரை கூறினார். சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.














; ?>)
; ?>)
; ?>)