மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் “ஆசிரியர் தினவிழா” சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் ஷேக்நபி தலைமை தாங்கினார். முனைவர் சப்ராபீபி அல்அமீன், தொழிலதிபர் மீரான் மைதீன், தமிழ் ஆர்வலர் ஆதித்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாணவர்களிடம் ஆசிரியர்களின் தியாகஉணர்வு மற்றும் அர்ப்பணிப்புணர்வை எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்துனர் சப்ராபீபி அல்அமீன் அவர்கள் ஆசிரியர் தின நினைவுப்பரிசினை அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கி சிறப்பித்தார். தொழிலதிபர் மீரான் மைதீன் மற்றும் தமிழ் ஆர்வலர் ஆதித்தா மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தமிழ்க்குமரன், தெளபீக் ராஜா செய்திருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)