• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டீ விற்பவர் டூ பிரதமர்.. மணல் சிற்ப கலைஞரின் அட்டகாசமான ஐடியா…

Byகாயத்ரி

Sep 17, 2022

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் அவர்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் 1,213 மண் டீ கப்களை கொண்டு பிரதமரின் ஐந்து அடி மணல் சிற்பத்தை உருவாக்கி பிரதமர் மோடிக்கு தனது கலையின் மூலம் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டீ விற்பவராக வாழ்க்கையை தொடங்கி தற்போது நாட்டின் பிரதமர் வரையிலான அவரது வாழ்க்கை பயணத்தை காட்டும் வகையில் மண் டீ கப்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.