• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னையில் பறக்கும் டாக்ஸி… விரைவில் அறிமுகம்…

Byகாயத்ரி

Jun 3, 2022

சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலும் குறிப்பாக அலுவலகம் சென்று திரும்பும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் உச்சத்திலிருக்கும். அதுமட்டுமல்லாமல் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் நேரடியாக காற்று மாசை ஏற்படுத்துகின்றது. அதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ePlane என்ற நிறுவனம் சென்னையில் பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்த உள்ளது.

இதற்கான சேவை 2024 ஆம் ஆண்டு முதல் தொடங்கும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. e200என்னும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய இந்த குட்டி விமானத்தில் 2 பேர் வரை பயணம் செய்யலாம். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 200 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய திறன் கொண்டது. அதனைப்போலவே செங்குத்தாக இறங்கவும் செய்யும். செங்குத்தாக பறக்கவும் செய்யலாம். இந்த அறிவிப்பு சென்னையில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.