திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த நாச்சிபாளையத்திலிருந்து தார் சாலை அமைப்பதற்காக கார் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை அருண்குமார் என்பவர் இயக்கி வந்துள்ளார்.

லாரி கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை லட்சுமி மில்ஸ் பகுதியை கடக்க முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் வந்து சாலையின் நடுவே இடதுபுறம் கவிழ்ந்தது. மேலும் லாரியில் கொண்டுவரப்பட்ட தார் முற்றிலுமாக சாலையில் கொட்டியது. இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து ஜேசிபி,கிரேன் உள்ளிட்ட வாகனங்கள் வரவழைக்கப்பட்டு லாரி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார்.







; ?>)
; ?>)
; ?>)