• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தி.மு.க ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் 633 கோடி.., சாதனையா? வேதனையா?முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..!

விடியா தி.மு.க ஆட்சியில், குடும்பத் தலைவிக்கு 1000 கோடி உரிமை தொகையாக ஒதுக்கிவிட்டு, தீபாவளி டாஸ்மாக் வருமானமாக 633 கோடியை குடும்பத் தலைவரிடம் திமுக அரசு திரும்பபெற்றுள்ளது. இது சாதனையா? வேதனையா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..,
இன்றைக்கு தேசிய குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக விளங்குவது குழந்தைகள் தான். சிறு வயதிலேயே கற்றுக் கொள்ளும் விஷயங்கள் அவர்களின் நல்வாழ்வுக்கு பெரிதாக அமையும் ஆகவே நாம் நல்லவைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் இது நமது தலையான கடமையாகும். ஆனால் நாட்டில் இன்றைய நிலைமை என்ன என்பதை பார்க்கும் பொழுது நமக்கு வேதனைதான் மிஞ்சி இருக்கிறது. இன்றைக்கு நடைபெறுகிற சம்பவங்களை நாம் பார்க்கிறபோது கண்ணீர் வடித்து இன்றைக்கு இந்த அரசை நாம் எப்படி கேள்வி கேட்பது என்று மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு மதுவினால் நடைபெற்ற கொலை மற்றும் விபத்துகளிலே 20 விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் பலியாகி இருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு 633 கோடிக்கு அரசு டாஸ்மாக் மதுபான விற்பனை கூடங்களிலே விற்பனை நடந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு 25 கோடி மதிப்புள்ள 3.6 கிலோ ஹெராயன் போதல் பொருள் கடத்தி வரப்பட்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தெருவிலே பட்டப்பகலில் அங்கே மது குடித்துக் கொண்டிருப்பவர்களை கண்டித்ததுனாலே மனைவி கண் முன்னாலே  சிவக்குமார் என்பவர் வெட்டி சாய்க்கப்பட்டுளார்.

பள்ளிக்கூடம் செல்லுகிற குழந்தைகளை போதைப் பொருளுக்கு அடிமையாகிற அந்த ஒரு அபாயகரமான நிலையிலே, அதிர்ச்சியான புள்ளி விவரங்கள் கவலையில் ஆழ்த்துகிறது. இதைத்தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் சட்டமன்றத்தில் மிகத் தெளிவாக ஆதாரத்தோடு, புள்ளிவிவரத்தோடு சட்டமன்றத்தில் எடுத்து வைத்தார். அதில்போதை பொருள் நடமாட்டம் இன்றைக்கு மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிற காரணத்தினாலே, இளைய தலைமுறை சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்தி சீர்படுத்தி செம்மைப்படுத்த வேண்டும் என கூறினார் ஆனால் முதலமைச்சர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
 முயற்சி எடுத்தால் தானே நமக்கு தெரியும்  ஆனால் தன் மகனை மட்டும் விளையாட்டு மற்றும் இளைஞர் மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சராக  நியமித்திருக்கிறார்.  இன்னைக்கு ஊரார் பெற்ற பிள்ளைகள் எல்லாம் அவர்களுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாகி சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறார்களே இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
தீபாவளி திருநாளில் இந்த முதலமைச்சர் இந்த மக்களுக்காக இன்றைக்கு என்ன சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தார். பேருந்துகள் கிடைக்காமல் கூட மக்கள் அவதிப்படுகின்றார்கள். ஆனால் பெருமையாக பேசிக் கொள்கிறார்கள் மகளிர் உரிமை தொகையை 1000 கோடியை வழங்கியுள்ளோம் என்று. ஆனால் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் கோடியை ஒதுக்கிவிட்டு இன்றைக்கு தீபாவளி பண்டிகையில் மட்டும் குடும்பத் தலைவரிடம்  டாஸ்மாக் இருந்து 633 கோடி அளவில் திரும்பபெற்றுள்ளனர். அப்படியானால்  ஏழை எளிய, சாமானிய, நடுத்தர விளிம்பு நிலை மக்களுடைய எதிர்காலம் என்ன ஆகும். 
 இன்றைக்கு போதை இல்லாத தமிழ் நாட்டை முதலமைச்சர் உருவாக்காமல் போதை உள்ள தமிழ்நாடாக உருவாக்கியுள்ளார். இதனால் இளைஞர்கள் எதிர்காலம் என்னவாகும்? வீதிகளில் எல்லாம் சாராயம் ஆறு ஓடுகிறது. எடப்பாடியார் தினந்தோறும் கண்டன அறிக்கையை ஆதாரத்தோடு எடுத்து வைக்கின்றார்களே? இன்றைக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்  நீங்கள் எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையை முழுமையாக உள்வாங்கி செயல்பட்டாலே தமிழகத்தில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நடப்பாண்டில் கூட 50,000 கோடி டாஸ்மாக் விற்பனையை அரசு நினைத்ததாக செய்தி வருகிறது.

தீபாவளி முன்னிட்டு நடைபெற்றிருக்கிற மதுவினால் இந்த கொலை விபத்து சம்பவத்தில் 20 உயிர் பலி போனதற்கு முழுக்க முழுக்க செயல்படாத முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சர் தான் பொறுப்பு என்பதை இந்த தமிழ்நாட்டு மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் அதை நான் வழிமொழிகிறேன். இதற்கு முழுபொறுப்பேற்பாரா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்? இனிமேலாவது இந்த தமிழகத்திலே போதை இல்லாத தமிழக நாடாக உருவாக்க வேண்டும். குடும்பத் தலைவிக்கு ஆயிரம் கோடி ஒதுக்கிவிட்டு, டாஸ்மாக்கில் 633 கோடி விற்பனை என்று பார்க்கும்போது இது சாதனையா? அல்லது வேதனையா? என்று கூட்டி கழித்து பார்க்கும் பொழுது இந்த ராஜ்யத்திற்கு பூஜ்ஜியமே பரிசாக கிடைத்துள்ளது கூறினார்.