• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் தர்ணா போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பணியில் இருந்து நீக்கப்பட்ட கூட்டுறவு சங்க ஊழியர் குடும்பத்துடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

     நாகர்கோவில் இருளப்பபுரத்தில்  உள்ள கூட்டுறவு  சங்கத்தில் சீனிவாசன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பணியில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படும் நிலையில் சீனிவாசன் இன்று கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு வந்து என்னை எதற்காக பணியில் இருந்து நீக்கினீர்கள் ?என்று கேட்ட அவர் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கூறி , சங்க அலுவலகத்தில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினார்.அப்போது அங்கு கோட்டார் காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் வந்தனர்.
 அவருடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அவர்தன்னை வேலையில் மீண்டும் ஈடுபடும்படி சீனிவாசன் கூறினார். இதனையடுத்து சீனிவாசனிடம் சங்க அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் சீனிவாசன் நீண்டநாட்கள்  பணிக்கு வராததால் அவரை  நீக்கியதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் சீனிவாசனுக்கு பணி வழக்குவது தொடர்பாக  உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக சங்க அலுவலர்கள் கூறினர்.இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கூட்டுறவு சங்கத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.