• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழக நிதிநிலை உயரும்..,
அமைச்சர் மூர்த்தி..!

Byவிஷா

Mar 29, 2022

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழக நிதிநிலை உயரும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை சக்கிமங்கலத்தில் வருமுன் காப்போம் திட்டததின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார், அப்போது பூம் பூம் மாட்டுக்காரர்கள், சாட்டையடிக்காரர்கள் மேளம் வாசித்தும், சாட்டையடித்தும் தங்களது குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் படி அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக் கை மனு அளித்தனர்,.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி கூறுகையில் ‘முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழக நிதிநிலை உயரும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும், மதுரையில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது, தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிக்கு முன்னுதாரணமாக மதுரை மாநகராட்சி செயல்படும்,. விருதுநகர் பாலியல் வழக்கில் 24 மணி நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது, 15 ஆண்டுகால கோரிக்கையாக உள்ள துணை காவல் நிலையம் செயல்பட உள்ளது, சக்கிமங்கலம், வரிச்சியூர் ஆகிய 2 இடங்களில் துணை காவல் நிலையங்கள் அமைக்கப்பட்ட உள்ளது,

அதிமுக ஆட்சி காலத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 90 சதவீத திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை, திமுக ஆட்சிக்கு வந்த 10 மாத காலங்களில் தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட 500க்கும் மேற்பட்ட திட்டங்களில் 200க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது, வாக்குறுதி அளித்த அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்படும்’ என கூறினார்.