சிவகாசி அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி அடுத்த வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயரங்காபுரம் ஊராட்சி மேலக்கோதை நாச்சியார் புரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன. தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மேளதாளத்துடன் வரவேற்பளித்தனர். திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது வரை தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். மேலும் மதுபான விற்பனையில் பல ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர். அதனை மறைக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முயன்று வருகிறார். புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் மக்களின் வாழ்வதற்காக புதிய அறிவிப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. பட்ஜெட்டில் பொய்யான வாக்குறுதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இனி மக்கள் ஏமாற மாட்டார்கள். 2026 இல் ஆட்சி மாற்றம் நிச்சயமாக நிகழும் என மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் கூறினார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்கழக வெம்பக்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)