• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தமிழக வெற்றிக்கழக மாநாடு ஒத்திகை நிகழ்வு..,

ByKalamegam Viswanathan

Aug 16, 2025

தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநில மாநாடு வரும் வியாழக்கிழமை மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்காக காவல்துறை அனுமதி கொடுத்த நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாநாட்டு திடலில் ஒன்றரை லட்சம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாராட்டு திடலில் கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இரவு பகலாக மாநாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..

இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு அவசர கால மருத்துவ உதவிக்காக 500 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு திடலில் மருத்துவ தேவைக்காக ஏதேனும் பொருட்கள் தேவைப்பட்டால் கூட்டத்தில் உடனடியாக கொண்டு செல்ல முடியாது என்பதற்காக முதன் முறையாக மாநாட்டு திடலில் அவசர உதவிக்கான பொருட்கள் கொண்டு செல்லும் ட்ரோன் பயன்படுத்தப்பட உள்ளது.

25 கிலோ எடை உள்ள பொருட்களை கொண்டு செல்லும் வகையில் பெரிய ட்ரோன் பயன்படுத்தப்படுகிறது அதற்கான முன்னோட்ட பரிசோதனை இன்று மாநாட்டு திடலில் நடைபெற்றது .

இந்த ட்ரோன் பரிசோதனையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள். மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வதாகவும் அவர்களின் அவசர கால தேவைக்காக மருந்து பொருட்கள் கொண்டு செல்ல இதுவரை இல்லாத வகையில் மாநாடு வரலாற்றில் முதன்முறையாக பெரிய டிரோன் பயன்படுத்தப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மாநாட்டுத் திடலில் மாரடைப்பு மற்றும் உடல் நல கோளாறு அல்லது காயம் ஏற்படுபவர்களுக்கு அங்கு ஏற்படும் கூட்ட நெரிசலில் மருந்து பொருட்கள் உடனடியாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும் போது அவர்களுக்கு உதவுவதற்காக முதன்முறையாக பெரிய ட்ரோன் பயன்படுத்தப்படுவதாகவும் ட்ரோன் மூலம் மருத்துவ உபகரணங்கள்,மருந்து பொருட்கள்,ரத்தம் தேவைப்படுவோருக்கு உடனடியாக ரத்தத்தை கொண்டு செல்லவும் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்வதற்கும் மேலும் 25 கிலோ எடை கொண்ட பொருட்கள் கொண்டு செல்வதற்கும் இந்த ட்ரோன் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ட்ரோன் மூலம் 25 கிலோமீட்டர் தூரம் வரை கொண்டு செல்லமுடியும் எனவும் ட்ரோன் அமைபாளர் தினேஷ் தெரிவித்தார்.