• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மழை வேண்டி சிறப்பு தொழுகை

ByG.Suresh

May 5, 2024

சிவகங்கை பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் குளங்களிலும் தண்ணீர் இல்லாமல், வீடுகளில் உள்ள போர்களிலும் தண்ணீர் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும், கால்நடைக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சிவகங்கை மிகவும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிவகங்கை கிளையில் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 7 மணி அளவில் மழை வேண்டி ஆண்கள் சட்டைகளை திருப்பிப் போட்டும், கைகளை நீட்டியவாறு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கலந்து கொண்டு மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட தலைவர் ரபீக் முகமது தலைமை தாங்கினார் & மாவட்ட பொருளாளர் முகமது இஸ்மாயில் முன்னிலை வகித்தார்.
மாவட்டத் துணைச் செயலாளர் சிஹாபுதீன், மாவட்ட மாணவரணி செயலாளர் வரிசை முகமது, சிவகங்கை கிளை தலைவர் ஷாஜகான், செயலாளர் ராஜா முகமது, பொருளாளர் உமர், துணை தலைவர் சாகுல், துணைச்செயலாளர் பர்வீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.