கன்னியாகுமரி கடல் நடுவே புத்தாயிரம் ஆண்டில் (2000) தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 13 ஆண்டுகள் பல தடைகளை கடந்து 133 அடி உயரம் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தது. தமிழக வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி கடற்பாறையில் ஐய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பை தொடர்ந்து,
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழகம்,இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டும் அல்லது கடல் கடந்து பல நாடுகளில். விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் “திருவள்ளுவருக்கு சிலை” நிறுவுவதை ஒரு கடமை உணர்வுடன் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் வி.ஜி. சந்தோசம் தொடர்ந்து செய்து வருகிறார். அந்தவகையில் கங்கை கரை ஓரம் முதல் திருவள்ளுவர் சிலையை நிறுவியதுடன். இதுவரை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை என பல்வேறு நாடுகளில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு வரும் வரிசையில், நெல்லை மாவட்டத்தின் எல்லை குமரி மாவட்டத்தின் தொடக்கம் பகுதியான வடக்கன் குளத்தில் உள்ள ஜாய் பல்கலைக்கழகம் வளாகத்தில் 164_வது திருவள்ளுவர் சிலையை. வி.ஜி. பி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர். வி.ஜி. சந்தோசம் தலைமையில்,ஜாய் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர்.எஸ்.ஏ. ஜாய் ராஜா முன்னிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவரது பேச்சில். வடக்கன் குளம் ஊரின் பெயரில் குளம் இருக்கிறது ஆனால் தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்த இந்த ஊருக்கு அந்த காலத்தில் பெண் கொடுப்பது மிகவும் அரிது. அப்படி இருந்த வடக்கன் குளம் என இப்போதைய தலைமுறையிடம் சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள்.


வடக்கன் குளம் கன்கார்டியா பள்ளியில் தான் நான் ஆசிரியராக பணியாற்றினேன். எனவே இந்த ஊரை பற்றி இங்கு அன்று வாழ்ந்த புகழ்பெற்ற மனிதர்களை நான் அறிவேன்.
அரபு நாட்டில் பணியாற்றி ஈட்டிய ஊதியத்தை சேர்த்து வைத்து சொந்த ஊரிலேயே தொழில் தொடங்கியவர் மறைந்த எனது நெருங்கிய நண்பர் எஸ்.ஏ.ராஜா. அவர் பல பொறியியல், தாதியர் கல்லூரிகளை தொடங்கிய பின் வடக்கன் குளத்தின் தோற்றமே மாறிவிட்டது.

தந்தை வழியில் அவரது மகன் ஜாய் ராஜா ஒரு தனியார் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த இரண்டு ஆண்டுகளிலே இங்கு போதிக்கப்படும் கல்வியின் தரம் தமிழகம் கடந்து பல தென் இந்திய மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இங்கு கல்வி பயில்வது ஜாய் பல்கலைக்கழகத்தின் சிறந்த ஆசிரியர்களது உழைப்பின் வெற்றியால் என பாராட்டிய சட்டப்பேரவை தலைவர் இந்த வளாகத்தில் ஒரு மருத்துவ கல்லூரியையும் தொடங்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என தெரிவித்தவர். எங்கள் குடும்ப உறுப்பினரான அண்ணாச்சி சந்தோசம். ஐய்யன் திருவள்ளுவர் மீதும்,அவரது தமிழ் மீதும், திருக்குறள் மீதும் கொண்டிருக்கிற பக்த்தியின் அடையாளமாக தமிழகம் மட்டும் அல்ல உலகப் பந்தில் எங்கெல்லாம் ஐய்யன் திருவள்ளுவருக்கு சிலை நிறுவ வேண்டும் என்ற தமிழ் பணியில். வடக்கன் குளம் ஜாய் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் 164_வது சிலையை திறந்து வைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

தலைவர் கலைஞர் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை சிலையை 2000_மவது ஆண்டில் திறக்கும் நிகழ்வின் போது. நான் அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால். அந்த விழாவில் ஐயா ஜி.கே.மூப்பனார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தலைவர் மூப்பனாருடன் நானும் பங்கேற்றது. இன்று என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

அண்ணாச்சி திருவள்ளுவரின் 1000_மாவது சிலையை திறக்கும் நாள் வரை இப்புவியில் நீண்ட நாள் வாழ்ந்து நிறை வேற்ற வேண்டும் என இங்கு கூடி இருக்கும் எல்லோரும் இறைவனிடம் வேண்டுவோம் என பேசி முடித்தார்.
