முதல்வர் முக.ஸ்டாலின் தொடக்கிவைத்த “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை நாகை மாவட்டத்தில் தொடங்கப்பட்டது . தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துரைத்து வீடுவீடாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை நாகை மாவட்டத்திலும் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவரும், திமுக மாவட்டச் செயலாளருமான கௌதமன் மற்றும் நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் இணைந்து மாவட்ட அளவில் பரப்புரையைத் துவக்கி வைத்தனர்.
தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி, பண்பாடு மற்றும் நிதிநலன்களை புறக்கணிக்கும் பாஜக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. நாகை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களில் வாக்குச்சாவடி வாரியாக, வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து, தமிழகத்தை பாதிக்கும் பாஜக அரசின் கொள்கைகள் மற்றும் செயல்கள் குறித்து பிரசாரம் மேற்கொண்டனர்.