கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது,
கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வந்தது.

இதனால் பீகாரில் சாலை விபத்துக்கள் குற்றங்களும் வெகுவாக குறைந்துள்ளது.
பீகாரிலும் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டது அப்பொழுது கூட உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை நிவாரணம் கொடுத்தால் அது தவறான உதாரணமாகிவிடும் என்பதால் தர மறுத்து விட்டது.
தமிழ்நாட்டில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டபோது பத்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியது.
பீகார் அரசு மதுவிலக்கை நோக்கி இருக்கிறது. தமிழ்நாடு அரசு மதுவை நோக்கி இருக்கிறது தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் தலைகுனிவாகும் பீகாரை பின்பற்றி மதுவிலக்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும்.
வரும் டிசம்பர் மாதம் மதுவிலக்கு மாநாட்டை கள் இயக்கம் நடத்தவிருக்கிறது.
இதில் பீகார் முதல்வருக்கும் அழைப்பு விடுகிறது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே இந்த மாநாடு திரும்பி பார்க்க வைக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்றார்.
வரும் 24ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் 4-வது ஆண்டாக பனை கனவுத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு கள் ஆதரவாளர்கள், இயற்கை ஆர்வலர்களும் பெரும்பாலானவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் வரும் விருந்தினர்களுக்கு கள் வழங்கப்படும்.
கொங்கு மண்டல பகுதிகளான ஈரோடு மாவட்டம் சிவகிரி, சென்னிமலை, உப்பிலிபாளையம், திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலும் விலை நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் விவசாய குடும்பங்களை குறிவைத்து கொலை கொள்ளை செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குற்றச்செயலில் ஈடுபவர்களை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் இதுவரை கைது செய்யாதது கண்டனத்திற்குரியது.
காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்யாமல் போனால் 1993 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் உப்பாறு அணை பகுதியில் சின்ன கோலரம் பட்டியில் ஆடி மாதத்தில் வாகனத்தில் வந்து ஆடு மாடுகளை ஆட்களையும் அடித்து உதைத்து நகை மற்றும் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். காவல்துறையினர் உதாசீனப்படுத்திய காரணமாக ஊர் பொதுமக்கள் காவல் காத்து வந்தனர். ஒரு கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்துவிட்டு திரும்பும் பொழுது வாகனம் பழுதானதால், ஊர் மக்கள் 11 பேரில் 9 பேரை பொதுமக்கள் அடித்தே கொன்றனர்.
அது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது அந்த வழக்கில் எவரும் தண்டிக்கப்படவில்லை. இது தவறான ஒரு முன் உதாரணம் சட்டத்தை கையில் எடுத்து ஜனநாயக மரப்பிற்கு முரணானது. காவல்துறையும் தமிழ்நாடு அரசின் தடுக்க தவறினால், 1993 ஆம் ஆண்டு தாராபுரத்தில் நடந்ததை போன்று மோசமான நடை பெறுவதற்கு உண்டான வாய்ப்புக் கூடுதலாக உள்ளது. இந்தப் பகுதியில் இன்று வரை கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.








