• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வள்ளலார் இராமலிங்க சுவாமியை சானதனவாதியாக சித்தரிக்க முயலும் தமிழக ஆளுநர்.., மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு…

நாகர்கோவிலில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர் பாலகிருஷ்ணன் வெளிப்படுத்திய குற்றச்சாட்டுகள்.

மத்திய அரசு உயர்த்தியிருக்கும், 25 சதவீத மின் கட்டணம் உயர்வில்,மோடி அரசு கொண்டு வந்திருக்கும் புது விதமான திட்டம் பகல் நேரத்திற்கு ஒரு வகை கட்டணம், இரவு மின் பயன்பாட்டுக்கு பகல் நேர மின் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் என்பது ஒன்றிய அரசு நாட்டு மீது சுமத்தியுள்ள கூடுதல் சுமை.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக 38/_சதவீத வாக்குகளை மட்டுமே வாங்கி ஆட்சி அமைத்தது. பாட்னாவில் கூடிய எதிர் கட்சி கூட்டம் மூலம் ஏற்படும் மாற்றங்களில் ஒன்று. எதிர்கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் பிரியும் வாக்குகள் பாஜகவிற்கு இது வரை சாதமாக, வெற்றிக்கு வழி வகுத்தது. இனி எதிர் கட்சிகள் ஒன்று பட்டு அமைக்கும் இந்த ஏற்பாட்டால், பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் முயற்சியில் வெற்றி கிட்டும்.

வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகளையும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விட்டு வைக்காது சானதன போர்வையை போர்த்த நினைக்கிறார். சிதம்பரத்தில் தீட்சிதர்கள் நடத்திய சிரார் திருமணத்தை ஆதரிப்பது மட்டும் அல்ல, அவரே சிறுவர் திருமணத்தை செய்து கொண்டவர் என்று பேசுகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சோதனை இடுவது, கைது செய்வது பற்றி எங்களுக்கு ஆட்சோபனை இல்லை. ஆனால் அமலாக்க துறை அதிகாரிகளின் அணுகுமுறை சரியா என பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். பாஜக ஆட்சியில் பெண்களுக்கு இளைக்கும் கொடுமை கண்டனத்திற்கு உரியது எனவும் தெரிவித்தார்.