• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விண்வெளிப் பூங்கா அமைக்க இஸ்ரோவுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

Byவிஷா

May 18, 2024

குலசேகரன் பட்டினத்தில் விண்வெளிப் பூங்கா அமைப்பதற்காக இஸ்ரோவுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
குலசேகரன்பட்டினம் புவி வட்டப்பாதையின் மிக அருகில் இருப்பதாகவும், ராக்கெட் இயங்குவதற்கான தட்ப வெப்பம், மண்ணின் தன்மை சரியாக இருப்பதாகவும் இஸ்ரோவால் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இப்பகுதியில் ஆயரத்து 500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளிப்பூங்கா அமைப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு தொழில்மேம்பாட்டு கழகத்துடன் இஸ்ரோவின் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதில் ராக்கெட்டின் உதிரி பாக தொழிற்சாலை, ராக்கெட் உந்து சக்தி பூங்கா உள்ளிட்டவை அமைப்பதற்காக குலசேகரன்பட்டினத்தை ஒட்டியுள்ள கூடல்நகர், மணப்பாடு, மாதவன்குறிச்சி, அமராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.