மருத்துவ காப்பீட்டு திட்ட குளறுபடிகளை களைந்து காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வலியுறுத்தி, அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று மதியம் சுமார் இரண்டு மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பா.வடிவேலு தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.சங்கரநாராயணன், எஸ்.உதயசங்கர், எஸ்.ராமசுப்பிரமணியன், ஐ.பவுன்தாய், மாவட்ட இணைச்செயலர் எஸ்.கருப்பன், எஸ்.கண்ணுச்சாமி, எம்.சாத்ரையா, மா.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கையை விளக்கி மாவட்ட செயலாளர் சு.செல்லமுத்து, காரைக்குடி வட்டத்தலைவர் சி. மாதவன், மானாமதுரை வட்டச்செயலர் எஸ். காந்தி, சிவகங்கை வட்டச்செயலர் பி. பாண்டி, காளையார்கோவில் வட்டச்செயலர் என், நாகுமணி ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்க மாவட்டத்தலைவர் எம்.இராமசாமி ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமுன்னாள் துணைத் தலைவர் எம். மெய்யப்பன் நிறைவுரையாற்றினார். மாவட்டப்பொருளாளர் வி.சரேஜினி நன்றி கூறினார். இந்த ஆர்பாட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைக்குப்பின் நிலுவையில் உள்ள செலவு தொகையை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியர் செலவு தொகை கோரி அனுப்பப்படும் மனுவின் நிலையை அறிய வலை தளத்தில் கண்காணிக்கும் வசதியை உருவாக்க வேண்டும். காசில்லா மருத்துவத்தை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






