• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்து அதிரடி காட்டிய தமிழக முதல்வர்…..

வட்டாட்சியர் அலுவலகம்,திட்ட பணிகள் நடைபெறுவது உள்ளிட்ட இடங்களுக்கு முதல்வர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்

தமிழகத்தில் கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தின் மூலமாக சேலம் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு, அரசுத் திட்டப்பணிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு உற்சாகமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கிருந்து புறப்பட்ட தமிழக முதல்வர் வரும் வழியில் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீராய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இதைதொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவையும் வழங்கினார்.இதை தொடர்ந்து சேலம் மாநகர பகுதியில் உள்ள ஈரடுக்கு பேருந்து நிலையத்தை நேரில் பார்வையிட்டு பணிகளின் நிலைகுறித்து உரிய அதிகாரிகளிடம் ஆய்வு செய்தார். மேலும் ஈரடுக்கு பேருந்து நிலையம் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சேலம்,நாமக்கல்,தர்மபுரி,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.