• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழர் தேசிய முன்னணி சார்பில் தமிழகம் பிறந்தநாள் விழா

Byகுமார்

Nov 1, 2022

மதுரையில் நவம்பர் 1 தமிழகம் பிறந்தநாள் விழா தமிழர் தேசிய முன்னணி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
மதுரை தல்லாகுளம் பகுதியில் தமுக்க மைதானத்தில் அமைந்துள்ள தமிழ் அன்னை சிலைக்கு தமிழர் தேசிய முன்னணி பழ. நெடுமாறன் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் பிச்சைகணபதி, பேராசிரியர் வேலன், ராமசுப்பு, துவாரகநாத் மற்றும் தமிழர் தேசிய முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் பேரறிவாளன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..குறிஞ்சியர் மக்கள் சனநாயக இயக்கம்தலைமை குழு உறுப்பினர் பவானி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மற்றும் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழர் தேசிய முன்னணியின்மதுரை மாவட்ட தலைவர் கணேசன் செய்தியாளர்களிடம் கூறியது நவம்பர் ஒன்றாம் தேதி மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகம் என பெயர் சூட்டிய நாள் தமிழர் தேசிய முன்னணி பழ. நெடுமாறன் வேண்டுகோளுக்கிணங்க தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். மதுரைதமுக்கம் கலை,அரங்கத்திற்கு தமிழ் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை மீண்டும் நிறுவ வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்