• Thu. Oct 10th, 2024

தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அறிக்கை வெளியீடு

Byதன பாலன்

Apr 10, 2023

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023-2026-ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தற்போதைய தலைவர் என்.இராமசாமி தலைமையிலான அணி ‘தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி’ என்ற பெயரில் மீண்டும் போட்டியிடுகிறது.

இந்த அணியில் தற்போதைய தலைவரான என்.இராமசாமி தலைவர் பதவிக்கு போட்டியிட, ஜி.எம்.தமிழ்குமரன் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். செயாளர் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.கதிரேசன் போட்டியிடுகிறார்கள்.

பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷும், இணை செயலாளர் பதவிக்கு எஸ்.செளந்தர பாண்டியனும் போட்டியிடுகிறார்கள்.அழகன் தமிழ்மணி, ஆர்.மாதேஷ், சித்ரா லட்சுமணன், மனோஜ் குமார், எச்.முரளி, எம்.கபார், என்.விஜயமுரளி, என்.சுபாஸ் சந்திரபோஸ், வி.பழனிவேல், ஏ.எல்.உதயா, ஷக்தி சிதபரம், எம்.திருமலை, அம்பேத் குமார், ஜே.சுரேஷ், சாலை சகாதேவன், எஸ்.ராமசந்திரன், டில்லி பாபு, தாய் சரவணன், என்.பன்னீர் செல்வம், எஸ்.ஆர்.செல்வராஜ், வி.என்.ரஞ்சித் குமார், ஜெயசீலன், ஜே.செந்தில் குமார், செந்தாமரை கண்ணன், அன்புதுரை என்கிற மிட்டாய் அன்பு, எஸ்.ஜோதி ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8 அன்று மாலை சென்னை தி.நகர் அக்கார்டு ஓட்டலில் நடைபெற்ற நிகழ்சியில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் மூத்தத் தயாரிப்பாளரான தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட, எஸ்.வி.சேகர், கே.ராஜன், வி.சி.குகநாதன் ஆகியோர் அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *