சமீபத்தில் க்ரீத்தி சனோன் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் ‘மிமி’. வாடகைத் தாயாக இருக்கும்போது ஏற்படும் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஓடிடியில் நேரடியாக வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பையும் பெற்ற ‘மிமி’ படத்தை தமிழில் ரீமேக் செய்யும் பணிகள் தற்போது தொடங்கியிருக்கின்றன.
அந்தவகையில், நாயகியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.