முருகனின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
முருகப்பெருமானின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பால்குடங்கள், காவடிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் பால்குடங்கள் மூலஸ்தானத்திலுள்ள தங்க வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் மலையடிவாரத்திலுள்ள பழனியாண்டவர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது.