• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மீலாடி விழாவை முன்னிட்டு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவையில் நடைபெற்ற தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சி

BySeenu

Sep 18, 2024

மீலாடி விழாவை முன்னிட்டு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவையில் நடைபெற்ற தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்டனர்.

இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை, மீலாது நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

சமூக மத நல்லிணக்க விழாவாக நடைபெற்ற இதில், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஜெ.முகம்மது ரபி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், முன்னதாக உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தொடர்ந்து சுமார் 3000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. தப்ரூக் உணவு எனப்படும் இதில் குஸ்கா, சிக்கன் கிரேவி மற்றும் தால்சா அடங்கிய பக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், நிகழ்ச்சியில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம். ராமசாமி, அப்துல் அஜீஸ், அப்துல் ஜபார், பேரூர் ஆதீனம் உமாபதி தம்புரான், டோனி சிங், சாய்பாபா காலனி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன்,தி.மு.க. சாய்பாபா காலனி பகுதி கழகச் செயலாளர் ரவி மாமன்ற உறுப்பினர் பேபி சுதா ரவி, ஜீவ சாந்தி அறக்கட்டளை சலீம், சஹனாஸ், பல் சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாகிர், ராதாகிருஷ்ணன் அப்துல் ரகுமான் ஹஜரத்,
வழக்கறிஞர் இஸ்மாயில், முஹம்மது அலி ஹைதர் அலி, சலீம், சிராஜுதீன், அபுதாஹிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.