தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், குடியரசு தின ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தகவல்…
குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழக ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பார்கள். இந்த நிலையில் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் அதிமுக உள்ளிட்ட மற்றும் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்க்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி தேனீர் விருந்தினை புறக்கணிப்பதாக அறிவுத்திருந்தனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயையும் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
தேநீர் விருந்தை புறக்கணித்த, த.வெ.க தலைவர் விஜய்
