• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

த.வெ.க. சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி…

பல்லடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மூன்று இடங்களில் கொடியேற்றி 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அறிவொளி நகர் தலைவர் அபு பக்கர் தலைமையில் மூன்று இடங்களில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியேற்று விழா மற்றும் 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜிகே சங்கர் கலந்துகொண்டு கொடியேற்றி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கியும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார் நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திறனாக கலந்து கொண்டனர்.