தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார்.
இந்த நிலையில் இன்று மாரியம்மன் மற்றும் மாவுடி ராமசுவாமி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் மாரியம்மன் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலயம் மண்டபத்தில் மாரியம்மன் மற்றும் மாவுடி ராமசுவாமி ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் படி செய்திருந்தனர்.
தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஊஞ்சல் சேவை சிறப்பாக நடைபெற்றது.
மாரியம்மன் மற்றும் மாவடி ராமசுவாமி ஊஞ்சல் சேவை அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து மாரியம்மனை மணமுருகி வழிபட்டுச் சென்றனர்.

நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய பரம்பரை அறங்காவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.