தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு அபய பிரதான ரெங்கநாதர் சாமி ஆலயத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது .

நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமிக்கு அதிகாலை பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக முத்து மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியைத் சுவாமியை மேள தாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிபுகுந்தார்.
தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி திருவீதி உலாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.