• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சனீஸ்வரர் பகவான் கோயிலில் சுவாமி தரிசனம்..,

Byஜெ. அபு

Jul 19, 2025

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தில் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீ சனீஸ்வரர் பகவான் திருக்கோயில்.‌ இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் சனிவாரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டில் கோயிலில் கொடி மரம் உள்பட பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் ஆடி சனிவாரத்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஆகம விதிப்படி ஆடி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாடு நடத்திட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்  ஆடி மாத முதல் சனிக்கிழமையான இன்று குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோயிலில் வழிபட பக்தர்கள் குவியத் தொடங்கினர்.‌ சுரபி நதியில் புனித நீராடிய பக்தர்கள் எள் தீபம்,பொறி படைத்தும், காக்கை வடிவிலான மண் சிலை வைத்தும் பக்தர்கள் பகவானை வழிபட்டனர். தொடர்ந்து ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று நீலாதேவி - சனீஸ்வரர் பகவான் திருக்கல்யாணம் நடைபெறும். இதையடுத்து ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று சோனை கருப்பண்ணசாமிக்கு மது படையல் மற்றும் கறி விருந்துடன் ஆடி சனிவார விழா நிறைவு பெறும். 

ஆடி சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.