குமரி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் பூம்புகார் படகு துறையில் ஆய்வு செய்தார்.
பொங்கல் விழா தொடர் விடுமுறை, சபரிமலை ஐயப்பன் தரிசனம் முடித்து பக்தர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள், கன்னியாகுமரி வருகை காரணமாக, குமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை பாறை,கண்ணாடிப் பாலம், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இவற்றௌக் காண பெரும் கூட்டமாக படகில் பயணிக்க நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் வெகுநேரம் காத்திருக்கும் சூழலை கவனித்த, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின். குமரியில் உள்ள 10_ காவல் நிலயங்களில் இருந்து, ஒவ்வொரு காவல் நிலையத்தில் 6_காவலர்கள் வீதம், கன்னியாகுமரி பகுதியில் கூடுதலாக 60_ காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப் போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.




