நாகர்கோவிலில் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த (பெப்ரவரி_14) வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
நீதிமன்றம் தீர்ப்பு சாதகமாக வந்ததை தொடர்ந்து சுரேஷ் ராஜான் மகன், மனைவியுடன் சென்னை புறப்பட்டார்.
சென்னையில் (பெப்ரவரி_15)-ம் நாள் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் மகன், மனைவியுடன் சந்தித்த சுரேஷ் ராஜான் நீதி மன்றம் தன்னை குற்றம் அற்றவன் என தீர்பளித்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

சென்னையில் முதல்வர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சுரேஷ்ராஜன் சந்தித்ததை அவரது ஆதரவாளர்கள் ஒரு விழவாகவே கொண்டாடி மகிழ்கின்றனர்.

சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026_ல் திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும், வெல்ல வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தை, மேலும் உறுதிப்படுத்தும் நிலையில், இரண்டு சட்டமன்ற தொகுதிகளை ஒரு மாவட்டம் என்ற நிலையில் தமிழகம் முழுவதும் இத்தகைய திட்டத்தில் மேலும் பலருக்கு மாவட்ட செயலாளராக வாய்ப்பு கிடைக்க செய்யும். திட்டம் குமரியில் விரைவில் மாற்றியமைக்கப்பட்டு. உருவாகும் புதிய மாவட்ட அமைப்பிற்கு சுரேஷ் ராஜான் மாவட்ட செயலாளர் என்ற அறிவிப்பு , சுரேஷ் ராஜான் சென்னையில் இருந்து குமரி வருவதற்கு முன்பே வந்துவிட்டால், நாகர்கோவில் இரயில் நிலையத்தில் குமரியின் மாவட்ட செயலாளராக வரவேற்கும் ஆவலில் சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் திமுக தலைமையின் அறிவிப்பை எதிர்பார்த்திருக்கிறார்கள்.