• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரீ ரிலீஸ் ஆகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’..

ByA.Tamilselvan

Nov 21, 2022

ரஜினிகாந்த் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான ‘பாபா’ திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் மீண்டும் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினியே படத்தை தயாரித்தும் இருந்தார். ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த ‘பாபா’ படத்தை இயக்கினார் சுரேஷ் கிருஷ்ணா.
கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குநர்களாக பணிபுரிந்தனர். மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது இந்தப் படம். அப்போது ரஜினியின் தோல்விப்படங்களில் ஒன்றாக இந்தபடம் அமைந்தது.
இந்த நிலையில், தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு (எடிட்டிங்) செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், அடுத்த மாதம் ரஜினியின் பிறந்தநாளன்று ‘பாபா’ திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.