மதுரையில் முதல் முறை சிறந்த சதுக்கம் ஆஸ்ட்ரோ மேட்டிங் பீச்சுகளுடன் ஃப்ளட்லைட்கள் அமைக்கப்பட்டு, அனைத்து வயதினருக்கும் ஏற்ற கிரிக்கெட் பயிற்சி அளிக்கக்கூடிய சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி திறக்கப்பட்டது.
.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரிகல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் கிரிக்கெட் மைதானத்தில், 6 முதல் 23 வயதுவரை உள்ள சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்குவதற்கான அகடாமியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் திறந்து வைத்தார்.
இதுதமிழகத்தின் 12வது மைய மாகவும்மதுரையில் திறக்கப்படும் முதல் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் இது சரியான தளமாக செயல்படும்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராமகிருஷ்ணன் சூப்பர் கிங்ஸ் அகாடமி கிரிக்கெட் இயக்குநர் லூயிஸ் மரியானோ கல்வி குழுமத்தின் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர்.
மதுரை மக்களுக்கு இதுவே முதல் முறை சிறந்த தரமான சதுக்கம் ஆஸ்ட்ரோமேட்டிங் பீச்சுகளுடன் மற்றும் ஃப்ளட்லைட்கள் கொண்ட கண்கவர் கிரிக்கெட் மைதானம் ஆகும்இங்கு உள்ள உலகத்தரமான வசதிகள் மற்றும் வாய்ப்புகளை பயன்படுத்தி கிரிக்கெட் ஆர்வலர்கள் தங்களது திறமையை உருவாக்க முடியும். கிரிக்கெட் பயிற்சியில் சிறந்தவர்களாக வளர்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக இந்த அகாடமி அமையவுள்ளது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.