குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை ராவ் மருத்துவமனையின் சார்பில் குழந்தைகளுக்கு சூப்பர் கிட்ஸ் 2025 போட்டிகள் நடைபெற்றது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராவ் மருத்துவமனை சார்பில் சூப்பர் கிட்ஸ் 2025 என்ற போட்டியை 6-வது போட்டி கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.இதில் பல்வேறு போட்டிகளில் குழந்தைகள் கலந்து கொண்டனர்.இந்த ஆண்டு நடைபெற்ற வினாடி வினா போட்டிகளில் 70 அணிகள் பங்கேற்றது.ஓவியப் போட்டிகளில் 240 குழந்தைகள் வண்ணங்களை தீட்டி உற்சாகத்துடன் ஓவியங்கள் வரைந்து அசத்தினர்.
அதனை தொடர்ந்து ஆடை அணிவகுப்பு போட்டியில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது ஆடை அழகை வெளிப்படுத்தினர்.போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசுகளும்,பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.

குழந்தைகளின் நலனுக்கும், வளர்ச்சிக்கு உதவும் நுண்ணூட்ட சத்துக்கள் நலன் பற்றியும் மருத்துவ நிபுணர்கள்,குழந்தைகள் நுண் ஊட்டச்சத்து மற்றும் பாலூட்டு நல நிபுணர் பேபி ஸ்ரீ ஆகியோர் பெற்றோர்களுக்கு ஆலோசனைகளை, கலந்துரையாடல் வழங்கினார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சூப்பர் கிட்ஸ் நிகழ்ச்சி குழந்தைகளின் திறனை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அவரது கற்கும் திறன்,வெளிப்பாடு, உற்சாகம் ஆகியவறை குழந்தைகளுக்கு ஊக்கப்படுத்துவதாக தெரிவித்தனர்.







; ?>)
; ?>)
; ?>)