நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நாளை முதல் துவங்குகிறது. முதல் நிகழ்ச்சியாக 13 ஆவது காய்கறி கண்காட்சி 2.50 டன் காய்கறிகளை கொண்டு கோத்தகிரி நேரு பூங்காவில் நாளை துவங்குகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் அவர்களை மகிழ்விக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு கோடை விழா நாளை முதல் துவங்குகிறது. புகழ் பெற்ற மலர் கண்காட்சி மே 16 ஆம் தேதி துவங்கி ஆறு நாட்கள் நடைபெறுகிறது.

வாசனை திரவிய கண்காட்சி கூடலூர் பகுதிகளில் மே 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ரோஜா கண்காட்சி 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பழக்கண்காட்சி 23 ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக 13 ஆவது காய்கறி கண்காட்சி 2.50 டன் காய்கறிகளை கொண்டு கோத்தகிரி நேரு பூங்காவில் நாளை துவங்குகிறது. 
நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகளை கவர தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகளால் ஆன ஜல்லிக்கட்டு காளை, மரகத புறா, கிளிகள், சிலம்பம் உள்ளிட்ட உருவங்கள் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் 18 அரங்குகள் அமைக்கப்பட்டு இதர மாவட்டங்களில் இருந்து கண்காட்சி நடைபெற உள்ளது.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)