• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி அருகே வேன் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிபட்டி அருகே தனியார் மில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த டிரைவரின் உடல் மீட்பு . உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு.

தேனி மாவட்டம் கானாவிலக்கு வைகைஅணை சாலையிலுள்ள தனியார் மில்லில் வேன் டிரைவராக பணிபுரிந்தவர் சுப்பையா ( வயது 32 ).நேற்று மாலை வழக்கம்போல மில்லுக்கு பணிக்கு வந்திருந்த அவர் வளாகத்திற்குள்ளேயே உள்ள புங்கமரத்தின் கிளையில் இன்று காலை தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அவரது மனைவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் வந்து பார்த்தபோது மரத்தில் தூக்கிட்டு நிலையில் தரையில் கால்களை ஊண்டிநின்றிருந்தவாறு அவரது உடல் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்து மில் வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் இறந்தவரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ததாக உறுதி அளிக்கப்பட்டதாக எடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் .